என் மலர்

  இந்தியா

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி 4.78 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 34,113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,26,65,534 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தற்போது வரை 4,78,882 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய பாசிட்டிவ் ரேட் 3.19 ஆகும். 346 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,09,030 ஆக உயர்ந்துள்ளது.
   
  இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 4.16 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 1.73 கோடியை நெருங்கியுள்ளது.

  Next Story
  ×