என் மலர்

  உலகம்

  14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர்
  X
  14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர்

  14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர் - பொறி வைத்து பிடித்த லண்டன் போலீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாணவரிடம் தொடர் விசாரணைக்கு பின்னர் அவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
  திருவனந்தபுரம்:

  இங்கிலாந்து நாட்டில் 14 வயதான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

  இதில் ஈடுபடுவோர், சிறுமிகளுக்கு சமூக வலை தளங்கள் மூலம் அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இது பற்றியும் போலீசாருக்கு தகவல்கள் சென்றன.

  இதன் அடிப்படையில் வலைதளங்களில் சிறுமிகளை செக்ஸ்-க்கு அழைப்போரை லண்டன் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர்.

  இதில் கேரளாவில் இருந்து லண்டனுக்கு மேற்படிப்புக்கு வந்த வாலிபர் ஒருவர் சிறுமிகளை செக்சுக்கு அழைத்தது தெரியவந்தது. அந்த வாலிபர் கோட்டயம் மாவட்டம் ராமபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

  அவர் லண்டனில் இருந்தபடி அங்குள்ள 14 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு செக்ஸ்-க்கு அழைத்தார்.

  இது லண்டன் சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் கேரள வாலிபரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

  இதற்காக அவர்கள் ஒரு போலி விலாசத்தை உருவாக்கி கேரள வாலிபரை தொடர்பு கொண்டனர். பின்னர் அவரை லண்டனில் உள்ள ஒரு லாட்ஜூக்கு வருமாறு அழைத்தனர். அவரும் நேற்று முன்தினம் அந்த லாட்ஜூக்கு ஆனந்தமாக சென்றார். அங்கு சிறுமிக்கு பதில் போலீசார் இருந்தனர். அவர்கள் கேரள வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

  போலீசில் சிக்கியதும், அந்த வாலிபர் கதறி அழுதார். செக்ஸ் ஆசையில் தவறு செய்துவிட்டதாகவும், இனி இது போன்று செய்வதில்லை என்றும் கூறினார். ஆனால் போலீசார் அவரை விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  தொடர் விசாரணைக்கு பின்னர் அவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

  Next Story
  ×