என் மலர்

  செய்திகள்

  துப்பாக்கிச்சூடு
  X
  துப்பாக்கிச்சூடு

  அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
  டென்னிசி:

  அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானார். மேலும் 13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். 

  தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, சூப்பர் மார்க்கெட் உள்ளே சென்ற போலீசார் அங்கு துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து மறைந்திருந்த பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர். 

  துப்பாக்கிச் சூடு நடத்தியாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதாக போலீசார் கூறுவதால், அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் காயங்களின் அளவு தீவிரமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியானது. 

  Next Story
  ×