என் மலர்

  செய்திகள்

  போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் ஜோடி
  X
  போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் ஜோடி

  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியை ரகசிய திருமணம் செய்துகொண்டார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
  லண்டன் :

  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56),  தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (32) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

  இவர்களுக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. இதையடுத்து, தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.

  இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

  லண்டனில் உள்ள ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மிக சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

  போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. ஜான்சனுக்கு இது 3-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. காதலி கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  கேரி சைமண்ட்ஸ் கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர். 2010-ம் ஆண்டு லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜான்சனுக்காக பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×