என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் 4ல் 1 பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
அமெரிக்க மக்கள் தொகையில் 39 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோசையும், 24.8 சதவீதத்தினர் முழு அளவிலும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் பிற நாடுகளை விட அமெரிக்கா எண்ணிக்கையில் முதல் இடம் பிடித்து உள்ளது. 3.1 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 5.60 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கினர் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர். இதுவரை 26 கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 715 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அவற்றில் 20 கோடியே 58 லட்சத்து 71 ஆயிரத்து 913 பேருக்கு நேற்று வரை தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 12 கோடியே 94 லட்சத்து 94 ஆயிரத்து 179 பேர் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுள்ளனர்.
8 கோடியே 24 லட்சத்து 71 ஆயிரத்து 151 பேர் முழு அளவில் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளனர். இதனால், அமெரிக்க மக்கள் தொகையில் 39 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோசையும், 24.8 சதவீதத்தினர் முழு அளவிலும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story