search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் ஜோ பைடன்
    X
    அதிபர் ஜோ பைடன்

    ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்புக்கு மெர்க் நிறுவனம் உதவும்- ஜோ பைடன்

    அமெரிக்காவில் ஜான்சன் அண்ட்ஜான்சன் கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு அந்நாட்டு மருந்து நிறுவனமான மெர்க் துணை நிற்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    அங்கு பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது.
     
    இந்நிலையில், அமெரிக்காவில் ஜான்சன் அண்ட்ஜான்சன் கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு அந்நாட்டு மருந்து நிறுவனமான மெர்க் துணை நிற்கும். இதன்மூலம் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்தை ஒரு முறை செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×