என் மலர்

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியை கடந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது.
    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.54 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

    மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வைரஸ் பரவியவர்களில் 13.33 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    தொற்று பாதித்தவர்களில் அதிக அளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 78,19,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×