என் மலர்
செய்திகள்

ஜோ பைடன் வெற்றியை கொண்டாடும் மக்கள்
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடும் மக்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை வாஷிங்டன் நகரிலுள்ள மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை
அதிபராகிறார்.
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பெற்றுள்ள வெற்றியை வாஷிங்டன் நகரின் சாலைகளில் கூடிய மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story