search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை
    X
    சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை

    அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா - 90 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

    அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது.

    மேலும், ஒரே நாளில் 745-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 58.58 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது 29.22 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×