என் மலர்
செய்திகள்

குண்டு வெடிப்பு நடந்த பகுதி
ஆப்கானிஸ்தான்: போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 16 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 16 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த குழுவுடனான அமைதி பேச்சுவார்த்தையை மேம்படுத்த ஆப்கானிஸ்தான் அதிபர் அச்ரப் ஹுலானி தோகா சென்றடைந்தார்.
அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹார் மாகாணத்தில் போலீஸ் தலைமையகத்தின் அருகே இன்று காலை 11.30 மணியளவில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிறதியது.
இந்த தாக்குதலில் 16 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 90 படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் தான் காரணம் என பாதுகாப்பு படையினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அமைதியை
சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே கருத்தப்படுகிறது.
Next Story