என் மலர்
செய்திகள்

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
நேபாளத்தில் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்- 12 பேரை காணவில்லை
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
காத்மாண்டு:
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் வசித்த 12-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்தில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story