search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப்
    X
    டொனால்ட் டிரம்ப்

    2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு: டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை

    2021-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
    வாஷிங்டன்:

    இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் சுமூகமான உறவை வைத்துக் கொள்வது, இதற்கு மாறாக வெஸ்ட் பேங்குடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் தீர்மானம் டிரம்ப் கொண்டு வந்து இருந்தார்.

    இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உறவை இயல்பாக்கும் வகையில் மத்திய கிழக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.

    இந்நிலையில்,  2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது.
     
    ஏற்கனவே, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×