என் மலர்
செய்திகள்

சீனா
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா ராணுவ செல்வாக்கை வேகமாக விரிவுபடுத்துகிறது - அமெரிக்க ராணுவம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ செல்வாக்கை வேகமாக விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.
இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக் கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
இதேபோல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. இது தவிர இந்தியா மற்றும் பூடான் நாடுகளின் எல்லையிலும் சீனா ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மேற்கூறிய அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பிராந்திய மற்றும் கடல்சார் ஆக்கிரமிப்பில் சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
அந்த வகையில் சீன ராணுவத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வரும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீனா தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது.
அதன்படி “2020-ம் ஆண்டு சீன குடியரசின் ராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்” என்கிற பெயரில் 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா வேகமாக ராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது என கூறப்பட்டுள்ளது. பென்டகன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
சீனாவின் தலைவர்கள் சீனாவின் நோக்கங்களை தொடர ஆயுத மோதலுக்கான குறுகிய தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஆயுத மோதலை தூண்டி சீனா தனது உரிமை கோரல்களுக்கான தந்திரங்களை அளவீடு செய்கிறது.
தெற்கு மற்றும் கிழக்கு சீனக்கடல்களில் சீனா தனது பிராந்திய மற்றும் கடல்சார் உரிமை கோரல்களை பின் தொடர்வதிலும் இந்தியா மற்றும் பூடானுடனான எல்லை ஆக்கிரமிப்பிலும் சீனாவின் தந்திரங்கள் தெளிவாக தெரிகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் கடல்சார் வளங்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரிவாயு வளங்கள் மிகுந்த பகுதிகளின் உரிமை கோரல்களில் சீனா மிகவும் கட்டாய அணுகுமுறையை பயன்படுத்துகிறது.
அந்தவகையில் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் சீனா வேகமாக ராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. இது அந்த பிராந்தியத்தில் உள்ள மற்றும் பிற நாடுகளுக்கும் மிகுந்த கவலை அளிக்கிறது.
இந்திய மற்றும் சீன எல்லையில் தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story