search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒரே நாளில் ஆயிரத்து 300 பேர் பலி - உறைந்து நிற்கும் பிரான்ஸ்

    பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 341 பேர் உயிரிழந்தனர்.
    பாரிஸ்:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் மொத்தம் 209 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போதுவரை அந்த முயற்சியில் பெரும் முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் உள்ளது. 
     
    இதற்கிடையில், உலகம் முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்கள் 48 ஆயிரத்து 953 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 262 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 95 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

    அந்நாட்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 749 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×