என் மலர்

  செய்திகள்

  ஸ்பெயின் போலீசார்
  X
  ஸ்பெயின் போலீசார்

  ஸ்பெயின் கடல்பகுதியில் 3 டன் போதைப்பொருட்களுடன் பிடிபட்ட நீர்மூழ்கி கப்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்பெயின் நாட்டு கடல்பகுதியில் 3 டன் கொக்கைன் போதைப்பொருட்களுடன் வந்த நீர்மூழ்கி கப்பலை சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.
  மாட்ரிட்: 

  ஸ்பெயின் நாட்டில் உள்ள கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்கள்  கொண்டு சென்ற நீர்மூழ்கி கப்பலை ஸ்பெயின் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சிறை பிடித்தனர். அதில் சுமார் 3 டன் கொக்கைன் போதைப்பொருட்கள் இருந்தன.

  கப்பலின் இருந்த இரு மாலுமிகளை போலீசார் காவலில் வைத்துள்ளனர். அதிகாரிகள் வருவதை அறிந்த கப்பலின் ஊழியர்கள் கப்பலை  முழுமையாக நீரில் மூழ்கச் செய்ய முயற்சித்துள்ளனர். அதை மேலே கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  மோசமான வானிலையால் முயற்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஸ்பெயின் நாட்டின் கலிசியா பிரதிநிதி ஜேவியர்  லோசார்ட்சா தெரிவித்துள்ளார். 

  20 மீட்டர் நீளமுடைய அந்த நீர்மூழ்கி கப்பல் தென் அமெரிக்காவில் இருந்து வந்தது என கூறப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்  கொலம்பியா அல்லது போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து வந்திருக்கலாம், கைது செய்யப்பட்ட இருவரும் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள்  என உள்ளூர் பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.
  Next Story
  ×