என் மலர்

  செய்திகள்

  நிரவ்மோடிக்கு லண்டனில் 2 சொகுசு வீடுகள்- புதிய தகவல்கள்
  X

  நிரவ்மோடிக்கு லண்டனில் 2 சொகுசு வீடுகள்- புதிய தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று லண்டனுக்கு தப்பிய நிரவ்மோடிக்கு அங்கு 2 சொகுசு வீடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #NiravModi
  லண்டன்:

  மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.

  இதற்கிடையே லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

  இந்தநிலையில் இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் அவரது வக்கீல்கள் தயாராக உள்ளனர்.

  இந்த மனுவில் அதற்கான ஜாமீன் தொகையை அதிகரித்து குறிப்பிட நிரவ் மோடியின் வக்கீல் முடிவு செய்துள்ளார். நிரவ்மோடி லண்டனில் ரூ.80 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி சொகுசு வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

  அதுமட்டுமின்றி அவருக்கு இதுபோன்று மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த 2 வீடுகளையும் வேறு நபர்களுக்கு அவர் விற்பனை செய்து இருக்கிறார். தனது பாதுகாப்பு கருதி வீடுகளை விற்றது போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த 2 வீடுகளும் நிரவ் மோடிக்கு சொந்தமானவை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  #NiravModi

  Next Story
  ×