என் மலர்
செய்திகள்

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி 24 பேர் பலி
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முன்னர் வைத்திருந்த கண்ணிவெடியில் இன்று பஸ் சிக்கிய விபத்தில் 24 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். #ISlandmine #Syrialandmine
டமாஸ்கஸ்:
சிரியாவின் பல பகுதிகளில் முன்னர் அதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் அடித்து விரட்டப்பட்டனர். அவர்களில் சிலர் ஈராக்-சிரியா எல்லைப் பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
முன்னர் சில பகுதிகளில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி பொதுமக்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர்.
அவ்வகையில், சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள சலாமியே பகுதியில் இன்று பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் கண்ணிவெடியில் சிக்கியதில் 24 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதே பகுதியில் இருவாரங்களுக்கு முன்னர் கண்ணிவெடியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். #ISlandmine #Syrialandmine
Next Story






