என் மலர்
செய்திகள்

ஜிம்பாப்வே - கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலி
ஜிம்பாப்வே நாட்டில் கரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரியும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Zimbabwe #BusAccident
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே என்ற பகுதியில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது பேருந்து விபத்து இதுவாகும். ஏற்கனவே, நவம்பர் 6ம் தேதி ருசாபே பகுதியில் நடைபெற்ற விபத்தில் 50 பேரும், நவம்பர் 15ம் தேதி மேற்கு நிக்கல்சன் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 42 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #Zimbabwe #BusAccident
Next Story