என் மலர்
செய்திகள்

மாலத்தீவு புதிய அதிபராக சாலிக் பதவி ஏற்பு - பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
மாலத்தீவின் புதிய அதிபரான இப்ராகிம் மொகமது சாலிக் பதவியேற்பு விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.#Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi
மாலே:
மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவியேற்றார்.
தலைநகர் மாலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பங்கேற்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய அதிபராக பதவியேற்ற இப்ராகிம் மொகமது சாலிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மாலத்தீவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாலத்தீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதன்முறையாக மாலத்தீவு செல்வது குறிப்பிடத்தக்கது. #Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi
Next Story






