என் மலர்
செய்திகள்

சிரியாவில் அமெரிக்கா கூட்டுப் படை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாப பலி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Syria #USledstrikes
சிரியா:
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சிரியாவில் செயல்படும் மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். #Syria #USledstrikes
Next Story