என் மலர்
செய்திகள்

உகாண்டாவில் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலி
உகாண்டா நாட்டில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
கம்பாலா:
உகாண்டா நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. உகாண்டாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழையை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

மேலும், வெள்ளப் பெருக்கால் அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. அங்குள்ள வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும். ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
Next Story






