search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமராக துணிச்சலான முடிவுகளை இம்ரான் கான் எடுக்க வேண்டும் - அசாருதீன்
    X

    பாகிஸ்தான் பிரதமராக துணிச்சலான முடிவுகளை இம்ரான் கான் எடுக்க வேண்டும் - அசாருதீன்

    கிரிக்கெட் கேப்டனாக இருந்தபோது செய்ததுபோல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #imrankhan #Azharuddin
    ஐதராபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் ‘தெஹ்ரிக் இ இன்சாப்’ கட்சியின் வெற்றியின் மூலம் அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் விரைவில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன், இம்ரான் கான் மீதான தனது எதிர்பார்ப்பு குறித்து மனம் திறந்துள்ளார். இந்த நிலைக்கு இம்ரான் கான் வளர்ந்து வந்துள்ள அரசியல் பாதை ரோஜாப்பூக்களால் ஆனதல்ல, முட்கள் நிறைந்த கரடுமுரடனான பாதையை அவர் கடந்து வந்துள்ளார் என அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் எடுத்த முடிவுகள் மிகவும் துணிச்சலாகவும், தனித்தன்மை கொண்டதாகவும், சாதகமானதாகவும் அமைந்திருந்தது. (அவரது நாட்டின் பிரதமரான பிறகும்) இதேபோன்ற முடிவுகளை அவர் எடுக்க வேண்டும்.

    ஆனால், இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதும் ஒரு நாட்டை தலைமையேற்று வழிநடத்துவதும் முற்றிலுமாக இரு வேறுபட்ட விவகாரம் என்பதால் இதில் அவர் என்ன செய்கிறார்? என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றால் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் சாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அசாருதீன், ‘ஒரு கிரிக்கெட் வீரர் ஆட்சியை பிடிப்பது மிகவும் அரிதான காரியம். முதல்கட்டமாக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அவர் தீர்க்க வேண்டியுள்ளது, அதன் பிறகுதான் மற்ற பிரச்சனைகள் தொடர்பாக அவர் திரும்பிப் பார்க்க முடியும்.

    ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே இத்தனை பூசல்களும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல்களும் தொடர்ந்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தை என்பது மிகவும் சிரமம் என்றே நான் கருதுகிறேன். முதலில் இதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் பல்வேறு விவகாரங்களை நேர்படுத்த வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். #imrankhan #Azharuddin
    Next Story
    ×