என் மலர்
செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங் சந்திப்பு
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங்கை சந்தித்தார். #PMModi #BRICS #XiJinping
ஜொகன்னஸ்பெர்க்:
ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என தெரிவித்தார்.
அதன் பின்னர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டு அதிபர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். அதன் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
#PMModi #BRICS #XiJinping
Next Story






