என் மலர்
செய்திகள்

உகாண்டா மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை கருவி அன்பளிப்பு - மோடி அறிவிப்பு
உகாண்டா மக்களுக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். #IndiatogiftUganda #ModiinUganda
கம்பாலா:
உகாண்டா மக்களுக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக இன்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.
உகாண்டாவுக்கு நீண்டகால கடனாக 20 கோடி அமெரிக்க டாலர்களும், ராணுவத்தினர் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டாவில் இருந்து விடைபெற்று செல்லும் மோடி நாளை ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். #IndiatogiftUganda #ModiinUganda
Next Story