search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை
    X

    சிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை

    கென்யாவில் சிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #kenya #ruthkamande
    நைரோபி:

    கென்யாவை சேர்ந்த பெண் ரூத் கமான்டே (24). இவர் பரீத்முகமது (24) என்ற வாலிபரை காதலித்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    அதையொட்டி நடந்த தகராறில் ரூத் கமாண்டே தனது காதலன் பரீத் முகமதுவை 25 தடவை கத்தியால் குத்தி கொலை செய்தார். எனவே கைது செய்யப்பட்ட அவர் நைரோபி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது.

    இந்த நிலையில் பெண் சிறை கைதிகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் ரூத் கமான்டே அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே இவர் மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீரப்பளித்தது.



    அவரது கொடூரமான செயலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால் இந்த தண்டனை மனிதாபிமானம் அற்றது என வலதுசாரி குழுக்கள் தெரிவித்துள்ளன.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ரூத் கமான்டே மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்தார். #kenya #ruthkamande
    Next Story
    ×