search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாகிஸ்தான் செய்தி சேனலில் முதல் சீக்கிய தொகுப்பாளர்
    X

    பாகிஸ்தான் செய்தி சேனலில் முதல் சீக்கிய தொகுப்பாளர்

    பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் செய்தி சேனல் ஒன்றில் ஹர்மீத் சிங் என்ற சீக்கியர் ஒருவர் முதல்முதலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். #PakistanNewsChannel #SikhAanchor #HarmeetSingh
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள சாகேசர் பகுதியில் ஹர்மீத் சிங் என்ற சீக்கியர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக அந்த செய்தி சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தி வாசிப்பாளராக ஹர்மீத் சிங் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு நல்ல குரல் வளமும், ஆளுமைத் திறனும் உள்ளது என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஹர்மீத் சிங் கூறுகையில், செய்தி துறையில் நான் மதத்தை பார்த்து வேலை பார்ப்பதில்லை. எனது உழைப்புக்கு கிடைத்த பலனாகவே இதை கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, மன்மீத் கவுர் என்ற சீக்கிய பெண், பாகிஸ்தானில் முதல் நிருபராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. #PakistanNewsChannel #SikhAanchor #HarmeetSingh
    Next Story
    ×