என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூர் வந்தடைந்தார்
  X

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூர் வந்தடைந்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தார். #Singaporesummit #DonaldTrump
  சிங்கப்பூர் :

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

  உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.

  சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்தற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.  அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் போலீசார் வாகனங்கள் அணிவகுக்க தான் தங்கும் ஹோட்டலுக்கு டிரம்ப் சென்று சேர்ந்தார். டிரம்பின் கார் செல்வதை படம் பிடிப்பதற்காக சாலையின் இருபுறமும் ஏராளமான தொலைக்காட்சி மற்றும் நிரூபர்கள் போட்டிப்போட்டு காத்திருந்தனர். #Singaporesummit #DonaldTrump
  Next Story
  ×