search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழப்பு 69 ஆக உயர்வு
    X

    கவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழப்பு 69 ஆக உயர்வு

    மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. #valcanoeruption
    கவுதமாலா:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலைக் குழம்பு சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

    எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழப்பு 69 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

    எரிமலை வெடிப்பால் சிதறிய சாம்பல் துகள்கள் இறந்தவர்களின் மீது படிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், நெருப்பு குழம்பினால் உயிரிழந்த பலருக்கு ரேகை இல்லாமல் போனதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும்  மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தேசிய தடயவியல் நிறுவன இயக்குனர் ஃபனூயெல் கார்சியா தெரிவித்துள்ளார்.



    இதனால் டி.என்.ஏ மாதிரிகளை கொண்டு அடையாளம் காண இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்பு படையினரும் கடுமையாக போராடி பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் முகமூடி அணிந்துகொள்ளும் படியும், வீட்டுக்கூரைகளின் மேல் படிந்துள்ள எரிமலை சாம்பலை அகற்றுமாறும், உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்குமாறும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. #valcanoeruption
    Next Story
    ×