search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயர்- போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்
    X

    அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயர்- போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

    அயர்லாந்தில் புதிதாக உருவாக்கப்படும் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயரை சூட்ட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#IrishAbortionLaws
    டியூப்ளின்:

    அயர்லாந்தில் கருக் கலைப்பு தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் அங்கு தங்கி இருந்த இந்திய பெண் சவீதா ஹலப்பனாவர் கடந்த 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

    அதைதொடர்ந்து அயர்லாந்தில் இச்சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய விதிமுறைகளுடன் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

    மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மெஜாரிட்டி மக்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை ரத்து செய்ய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.



    இதனால் இச்சட்டம் ரத்து ஆகி புதிய அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு அது நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் லியோ வராத்கர் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்படும் இச்சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயரை சூட்ட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#IrishAbortionLaws
    Next Story
    ×