என் மலர்

  செய்திகள்

  இலங்கை பிரதமருடன் இந்திய ராணுவ தளபதி சந்திப்பு
  X

  இலங்கை பிரதமருடன் இந்திய ராணுவ தளபதி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். #BipinRawat #RanilWickremesinghe

  கொழும்பு: 

  இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நான்கு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார்.  இந்திய ராணுவ தளபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். 

  இலங்கை சென்ர அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் நாளான இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். 

  அதன்பின் இலங்கை ராணுவ தளபதி மகேஷ் செனநாயகே, கடற்படை தளபதி எஸ்.எஸ்.ரணசிங்கே மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபிலா வைத்யரத்னே ஆகியோரையும் பிபின் ராவத் சந்தித்து பேசினார்.  இதைத்தொடர்ந்து நாளை கண்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வுகூடத்தை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, தியட்டலாவா பகுதியில் அமைந்துள்ள இலங்கை ராணுவ பயிற்சி மையத்தை பார்வையிடுகிறார். கண்டி மற்றும் திரிகோணமலை பகுதியில் இலங்கையின் பிராந்திய ராணுவ தளபதிகளை அவர் சந்திக்கிறார். #BipinRawat #RanilWickremesinghe
  Next Story
  ×