என் மலர்
செய்திகள்

அமெரிக்காவின் புதிய தூதரகத்துக்கு எதிராக ஜெருசலேமில் ஆர்ப்பாட்டம்
ஜெருசலேம் நகரில் நாளை திறக்கப்படும் அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக சிலர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #JerusalemUSembassy #Israeliprotestersrally
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது.
இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.
வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கு திறப்பு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் சிலர் இந்த விழாவை புறப்பணிப்பார்கள் என கருதப்படுகிறது.

இந்நிலையில், ஜெருசலேம் நகரில் நாளை திறக்கப்படும் அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக நேற்று சிலர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பல்வேறு பகுதிகளில் பேரணியாக சென்றனர். #JerusalemUSembassy #Israeliprotestersrally
Next Story






