search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம், இடம் குறித்து 3 நாளில் அறிவிப்பேன் - டிரம்ப்
    X

    கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம், இடம் குறித்து 3 நாளில் அறிவிப்பேன் - டிரம்ப்

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    வாஷிங்டன்: 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும் பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாக கிம் ஜாங் அன் கூறினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மட்டும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிம் உடனான சந்திப்புகான நேரம் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பை இன்னும் 3 நாளில் வெளியிடுவேன் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    Next Story
    ×