என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
குடியரசு கட்சி குறிப்பாணை வெளியிட்ட விவகாரம்: டிரம்புக்கு ஜனநாயகக்கட்சி எச்சரிக்கை
By
மாலை மலர்4 Feb 2018 12:09 AM GMT (Updated: 4 Feb 2018 12:09 AM GMT)

குடியரசு கட்சி வெளியிட்டு உள்ள ஒரு குறிப்பாணையை தொடர்ந்து, ஜனாதிபதி டிரம்புக்கு ஜனநாயகக்கட்சி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வாஷிங்டன்:
குடியரசு கட்சி வெளியிட்டு உள்ள ஒரு குறிப்பாணையை தொடர்ந்து, ஜனாதிபதி டிரம்புக்கு ஜனநாயகக்கட்சி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதில் ரஷிய தலையீடு தொடர்பான சிறப்பு விசாரணையை சீர்குலைத்தால், அரசியல் சாசன நெருக்கடி உருவாகும் என கூறப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா நேரடியாக தலையிட்டது என கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இருப்பினும், ரஷிய தலையீடு இருந்ததா என்பதை கண்டறிவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துகிறது. மேலும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவும் ஒரு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சற்றும் எதிர்பாராத வகையில், ஆளும் குடியரசு கட்சி ஒரு மெமோ (குறிப்பாணை) வெளியிட்டது. அதை வெளியிடுவதற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.
அந்த குறிப்பாணையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வரம்பு மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி டிரம்பின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் கார்ட்டர் பேஜை உளவு பார்ப்பதற்காக ஆதாரமற்ற சான்றுகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பும், நீதித்துறையும் பயன்படுத்துகிறது என்பதே குற்றச்சாட்டு.
இந்த குறிப்பாணையை வெளியிட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் குடியரசு கட்சி பிரசார குழுவுக்கும், ரஷிய அதிபர் மாளிகைக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த விசாரணையை சீர் குலைப்பதுதான் இந்த குறிப்பாணையின் நோக்கமாக உள்ளது என்று ஜனநாயகக்கட்சி கூறுகிறது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பும், இந்த குறிப்பாணையை சாடி உள்ளது. அதில் பல முக்கிய உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது என்றும் கருத்து தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்து நாடாளுமன்ற செனட் சபையின் ஜனநாயகக்கட்சி தலைவர் சக் ஸ்குமர், பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக்கட்சி தலைவர் நான்சி பெலோசி மற்றும் அந்தக் கட்சியின் 8 மூத்த தலைவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அந்த அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி விசாரிக்கிற சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர் அல்லது துணை அட்டார்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கு, குறிப்பாணையை பயன்படுத்தக்கூடாது என கூறி உள்ளனர்.
மேலும், “இந்த குறிப்பாணையை வெளியிட்டு இருப்பது விரும்பத்தகாத செயல். இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு பற்றிய சிறப்பு விசாரணையை சீர் குலைப்பதற்கான முயற்சி என்றே நாங்கள் கருதுகிறோம். இத்தகைய செயல், 1970-களில் நிக்சன் காலத்தில் ஏற்பட்டது போன்ற அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கி விடும்” என்று எச்சரித்து உள்ளனர்.
ஜனாதிபதியாக இருந்த நிக்சன், வாட்டர் கேட் ஊழலில் விசாரணை நடத்திய நீதித்துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டு, அரசியல் சாசன நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை, நீதித்துறையில் மாற்றங்கள் செய்ய மாட்டோம், சிறப்பு விசாரணைக் குழுவின் துணை அட்டார்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் தனது பணியில் தொடரலாம் என கூறி உள்ளது.

Next Story
×