search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பியது பாகிஸ்தான்
    X

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பியது பாகிஸ்தான்

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி, நேற்று விவாதத்தின்போது மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பேசினார். #Pakistan #Kashmir #UNSecurityCouncil
    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் மத்திய கிழக்கு விவகாரங்கள் பற்றிய விவாதத்தின்போது காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. அப்போது ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை, இந்தியாவுடனான பிரச்சினைகளில் பாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

    இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி நேற்று மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர், “பாலஸ்தீனர்களின் சட்டப்பூர்வமான எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும். உண்மையில், காஷ்மீரைப்போன்று வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மக்களுக்கு ஆதரவு தருவோம். ”என்று குறிப்பிட்டார்.

    மேலும், பாலஸ்தீனம், காஷ்மீர் போன்றவை தொடர்பான பிரச்சினைகளில் தனது சொந்த தீர்மானத்தை ஐ.நா. சபை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் ஐ.நா. சபையின் மீதான நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.   #Pakistan #Kashmir #UNSecurityCouncil #tamilnews 
    Next Story
    ×