என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து: கார் விபத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பலி
    X

    நியூசிலாந்து: கார் விபத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பலி

    நியூசிலாந்து கார் விபத்தில் பலியான மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு சுஷ்மா சுவராஜுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஐதராபாத்:

    நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லண்டு நகரில் ஐதராபாத்தைச் சேர்ந்த சையது அப்துல் ரகீம் பகத் என்பவர் படித்து வருகிறார். படித்துக்கொண்டே பகுதி நேரமாக டாக்ஸி ஓட்டுநராகவும் அப்துல் ரகீம் பணி புரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில்,  ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் உறவினர்கள், அப்துல் ரகீம் பகத்தின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, விபத்து ஏற்பட்டதில் ரகீம் இறந்ததாக கூறினர். டிராபிக் சிக்னலை மதிக்காமல் மதுபோதையில் கார் ஓட்டி வந்த ஒரு ஓட்டுநர், ரகீம் பகத் டாக்ஸி மீது பயங்கர வேகத்தில் மோதியதாகவும் இந்த விபத்தில் சிக்கி ரகீம் பகத் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    இதனால், சோகத்தில் மூழ்கியுள்ள ரகீம் பகத் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியை நாடியுள்ளனர். நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியையும் நாடியிருப்பதாக ரகீம் பகத் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா பா.ஜ.க. மாநில தலைவர் கே.லக்‌ஷமண் இது தொடர்பாக சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    Next Story
    ×