என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டனின் புதிய பாதுகாப்புத் துறை மந்திரியாக கவின் வில்லியம்சன் நியமனம்
    X

    பிரிட்டனின் புதிய பாதுகாப்புத் துறை மந்திரியாக கவின் வில்லியம்சன் நியமனம்

    பிரிட்டனின் பாதுகாப்புத் துறை மந்திரி மைக்கேல் ஃபாலன் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ராஜினாமா செய்ததையடுத்து புதிய மந்திரியாக கவின் வில்லியம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக நடந்துகொள்வதாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. 

    பிரிட்டன் பாதுகாப்புத்துறை மந்திரி மைக்கேல் ஃபாலனும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இவர் 2002-ம் ஆண்டு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் முழங்காலை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மைக்கேல் ஃபாலன் தனது மந்திரி பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி உள்ளார். தற்போது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகும் முதல் எம்.பி. மைக்கேல் ஃபாலன் என்பது  குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, அவருக்கு பதிலாக கவின் வில்லியம்சன் புதிய பாதுகாப்புத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு முதல் பிரிட்டன் ஆளுங்கட்சியின் ஒழுங்குமுறை கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×