என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏவுகணை தயாரிப்பை நிறுத்த மாட்டோம்: ஈரான் அதிபர் திட்டவட்டம்
Byமாலை மலர்29 Oct 2017 10:38 AM GMT (Updated: 29 Oct 2017 10:38 AM GMT)
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஏவுகணைகள் தயாரிப்பதை கைவிட மாட்டோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்:
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்தாக ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதை மையமாக வைத்து ஐக்கிய நாடுகள் சபை ஈரானுடன் செய்துகொண்ட அணு ஆயுதங்கள் பரவல்தடை தொடர்பான உடன்படிக்கையை ரத்து செய்யப் போவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது.
இதற்கிடையில், அதிநவீன ஏவுகணைகள் தயாரிக்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய ஈரான் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கு நன்றி தெரிவித்து இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, நாங்கள் ஏவுகணைகளை தயாரித்து வைத்திருக்கிறோம். தயாரித்து வருகிறோம். தொடர்ந்து தயாரிப்போம். எங்களை பாதுக்காத்துகொள்ள தேவையான எவ்வித ஆயுதங்களையும், நாங்கள் தயாரித்து இருப்பில் வைப்போம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை பயன்படுத்துவோம்.
ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சமரசங்களையும், ஒப்பந்தங்களையும் நீங்கள் (அமெரிக்கா) மதிக்க தவறுவதுடன் பிறநாடுகளையும் உங்களுக்கு ஆதரவாக திரட்டுகிறீர்கள். இதைப்போன்ற போக்கை தொடர்ந்து கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவடையும் அமெரிக்கா மறந்துவிட வேண்டியதாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
×