என் மலர்

  செய்திகள்

  ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க முன்வரும் இல்லினாய்ஸ் மாகாணம்
  X

  ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க முன்வரும் இல்லினாய்ஸ் மாகாணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி வழங்க முன்வந்துள்ள இல்லினாய்ஸ் மாகாண அரசு இது சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

  வாஷிங்டன்:

  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் இருந்து வந்தார். அமெரிக்க தேர்தல் விதிமுறைப்படி 2 தடவைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

  இதனால் பதவி காலம் முடிந்த ஒபாமா தனது குடும்ப செலவுகளுக்கு பல்வேறு வகைகளில் பணம் சம்பாதித்து வருகிறார்.

  சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துவது புத்தகம் எழுதுவது, ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை செய்து அதன் மூலம் பணத்தை பெற்று வருகிறார்.

  இந்த நிலையில் அவருக்கு நீதிபதி பதவி வழங்க இல்லினாய்ஸ் மாகாண அரசு முன்வந்துள்ளது. இது சம்பந்தமாக அவருக்கு அந்த மாகாண அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், நீங்கள் விரும்பினால் நீதிபதி பதவி ஏற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

  ஒபாமா நீதிபதி பதவி ஏற்க எல்லா தகுதிகளும் உள்ளன. அவர் முறைப்படி சட்டப்படிப்பு படித்துள்ளார்.

  அதிபர் ஆவதற்கு முன்பு அவர் சிக்காக்கோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் 12 ஆண்டுகள் சட்ட பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். எனவேதான் அவருக்கு நீதிபதி பதவி வழங்க மாகாண அரசு முன்வந்துள்ளது.

  ஆனால், நீதிபதி பதவியை ஒபாமா ஏற்பாரா? என்று தெரியவில்லை. இதுபற்றி ஒபாமா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

  Next Story
  ×