என் மலர்
செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு
வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவிவருகிறது.
மாஸ்கோ:
ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் சாவோ ஜியோனாராமலைப் பகுதியிலும் ரஷ்ய ராணுவம் கடும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழல் காரணமாக தென் கொரியாவில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவமே, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆயுதங்களுடன் ரஷ்யா வடகொரிய எல்லையில் ராணுவத்தை குவித்து வருவது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரஷ்யா ஒருபோதும் பார்த்துக்கொண்டு வெறுமனே இருந்து விடாது எனவும் ரஷ்யாவின் முக்கிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.
மேலும் அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக வடகொரியாவை உலக நாடுகள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் சமீப காலமாக கோரிக்கையை முன்வைத்து வந்தார்.
அதுமட்டுமின்றி ரஷ்யாவின் நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் அந்நாட்டை மீறி எதையும் செய்துவிட முடியாது என்ற எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்துவதாக உள்ளது என ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

Next Story