என் மலர்
செய்திகள்

ஜி-20 நாடுகளின் மாநாட்டில் தீவிரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு முக்கிய இடம்
ஜெர்மனியில் நாளை தொடங்க உள்ள ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய விவாதப் பொருட்களாக எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெர்லின்:
ஜெர்மனி நாட்டின் முக்கிய நகரான ஹம்பர்க்கில் நாளை ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன் முறையாக பங்கேற்கிறார். இம்மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை முதன் முறையாக டிரம்ப் சந்தித்துப் பேச இருக்கிறார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது சிக்கிம் விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-ம் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதே மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் தனியாக சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாநாட்டில் முக்கியமாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாறுபாடு தொடர்பான பிரட்சனைகளை விவாதிக்க உள்ளனர். பின்னர், வணிகம், கலாச்சாரம், பெண்கள் முன்னேற்றம், ஆப்ரிகாவுடன் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவையும், கூடுதலாக, வடகொரியாவின் ராணுவ அச்சுறுத்தல், கத்தார் விவகாரம் மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் வளரும் ஐ.எஸ் அமைப்பு உள்ளிட்ட சில விவகாரங்களும் பேசலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை மாலை முடியும் இம்மாநாட்டில் அனைத்து தலைவர்களின் கூட்டறிக்கை இடம் பெறுகிறது. உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story