என் மலர்
செய்திகள்

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு - 8 பேர் காயம்
பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர்.
பாரீஸ்:
தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதி உள்ளது. அங்கு அர்ராமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் இருந்து பலர் வெளியே வந்த கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர் அவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களில் 7 வயது சிறுமியும் அடங்குவார்.
இத்தாக்குதல் தீவிரவாதத்தால் நடைபெற்றது இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இத்தாக்குதல் நடைபெற்றது என்றார்.
பாரீஸ் புறநகரான கிரேடில் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மசூதி அருகே கூட்டத்தினர் மீது கார் ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் பிரான்சின் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story