search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் பலத்த சூறாவளிக்கு 14 பேர் பலி
    X

    அமெரிக்காவில் பலத்த சூறாவளிக்கு 14 பேர் பலி

    அமெரிக்காவில் பலத்த சூறாவளிக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். சூறாவளி காற்றின்போது மின் கம்பங்களும் சாய்ந்ததால் 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
    நியூயார்க்:

    அமெரிக்க மாகாணங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிசவுரி, ஆக்லஹோமா ஆகியவற்றில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி காற்று வீசியது. அப்போது பலத்த மழையும் கொட்டியது. மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் காற்று சுழன்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் முறிந்து வீடுகள் மற்றும் கார்களின் மீது விழுந்தன.

    பல இடங்களில் கன மழையால் வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. 3 முறை பலத்த சூறாவளி காற்று வீசியதை அமெரிக்க வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது.

    ஆர்கன்சாஸ், மிசவுரி, மிசிசிபி மாகாணங்களில் வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் 3 பேர் இறந்தனர். ஒரு குழந்தை உள்பட 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாயினர். 72 வயது பெண் ஒருவர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இந்த சூறாவளிக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சூறாவளி காற்றின்போது மின் கம்பங்களும் சாய்ந்ததால் 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. 
    Next Story
    ×