என் மலர்
உலகம்

நைஜீரியாவில் சோகம் - பஸ், லாரி நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் பலி
- நைஜீரியாவில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர்.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் எனுகு-போர்ட் ஹார்கோர்ட் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதனால் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






