என் மலர்
கோவில்கள்

32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தி விழா: 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பல்வேறு பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளுர்:
திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரில் 32 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி இன்று பஞ்ச முக ஆஞ்சநேயரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பல்வேறு பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டது. பல்வேறு மலர்களால் ஆராதனைகள் நடைபெற்றது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் மார்கழி அமாவாசை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.
மேலும் பக்தர்கள் காக்களூர் ஏரிக்கரை அருகே முன்னோருக்கு தர்ப்பணம் செய்துவிட்டு கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனர். கோவிலில் அர்ச்சனைகள் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
இதேபோல் திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி உறசவம் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
Next Story






