என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிக்டாக்
    X
    டிக்டாக்

    அரசு உத்தரவை செயல்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக டிக்டாக் இந்தியா அறிவிப்பு

    இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு உத்தரவுகளை செயல்படுத்தும் பணிகளை துவங்கிவிட்டதாக டிக்டாக் இந்தியா தெரிவித்து இருக்கிறது.


    டிக்டாக் இந்தியா நிறுவனம் அரசு உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான பணிகளை துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

    தடை உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள் டிக்டாக் இந்தியா நிறுவனம், 'மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய பயனர் விவரங்களை வேறு எந்த அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை' என தெரிவித்துள்ளது.  
    Next Story
    ×