search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    300 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆண்ட்ராய்டு ஆப்
    X

    300 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆண்ட்ராய்டு ஆப்

    கம்ப்யூட்டர் சாதனங்களில் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்களை இயக்கும் வசதியுடன் அறிமுகமான வி.எல்.சி. மென்பொருள் இதுவரை 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. #VLC

      

    பிரபல வீடியோ பிளேயர் மென்பொருள்களில் ஒன்றான வி.எல்.சி. 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஆண்ட்ராய்டு செயலியில் ஏர்பிளே வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி கொண்டு பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஆப்பிள் டி.வி.யில் ஸ்டிரீம் செய்து பார்த்து ரசிக்க முடியும்.

    வி.எல்.சி. ஆண்ட்ராய்டு செயலிக்கான அப்டேட் ஒரு மாதத்தில் வெளியாகும். இந்த அப்டேட் வெளியானதும் ஆப்பிளின் ஏர்பிளே ப்ரோடோகால் சூட் வசதியுடன் வயர்லெஸ் ஸ்டிரீமிங் செய்ய முடியும். 

    வி.எல்.சி. மீடியா பிளேயர் சேவையை தொண்டு நிறுவனமான வீடியோலேன் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2019 விழாவில் வீடியோலேன் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஒன்றிணைத்து வெவ்வேறு தளங்களில் இருந்து வி.எல்.சி. டவுன்லோடுகள் கண்காணிக்கப்பட்டது.



    சி.இ.எஸ். 2019 துவக்க நிகழ்வின் போது, வி.எல்.சி. பிளேயர் 300 கோடி டவுன்லோடுகளை கடக்க சில லட்சங்கள் பின்தங்கியிருந்தது. பின் 300 கோடி டவுன்லோடுகளை நேற்று (ஜனவரி 10) கடந்தது. மைல்கல் டவுன்லோடுகளை கடந்ததும், வி.எல்.சி. டெவலப்பரான லுடோவிக் ஃபாவெட் டவுன்லோடு கவுண்ட்டர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். 

    ஆண்ட்ராய்டு வி.எல்.சி. செயலிக்கான ஏர்பிளே வசதி வி.எல்.சி. 4 பதிப்பில் வழங்கப்படும் என மூத்த டெவலப்பர்களில் ஒருவரான ஜீன் பாப்டிஸ்ட் கெம்ப் தெரிவித்தார். ஏர்பிளே வசதி எல்.ஜி.யின் OLED டி.வி., சாம்சங் டி.வி. உள்ளிட்டவற்றிலும் வழங்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு இதர ஸ்மார்ட் டி.வி. நிறுவனங்களும் ஆப்பிளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. 
    Next Story
    ×