என் மலர்

    செய்திகள்

    குறைந்த விலையில் ஆஃப்லைனில் விற்பனையாகும் ரெட்மி 5A
    X

    குறைந்த விலையில் ஆஃப்லைனில் விற்பனையாகும் ரெட்மி 5A

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 5A ஆஃப்லைனில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 5A ஆஃப்லைன் விற்பனை காலத்தை நீட்டித்திருக்கிறது. 

    ரெட்மி 5A ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் பிக்பஜார் மூலம் ஆஃப்லைனில் விற்பனை செய்து வருகிறது. குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரெட்மி 5A (2ஜிபி ரேம்) விலை ரூ.4000க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற ஃபியூச்சர் பே வாலெட் மூலம் பணம் செலுத்த வேண்டும். 

    பிளிப்கார்ட் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.காம் தளங்களில் சியோமி ரெட்மி 5A ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதலாக 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    எனினும் இந்த சலுகை இன்று (ஜனவரி 28) நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 5A சிறப்பு சலுகைகள் ஸ்டாக் உள்ள வரை மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங்-ஐ பின்னுக்கு தள்ளி முன்னணி இடத்தில் இருக்கும் சியோமி, தற்சமயம் வழங்கி வரும் சிறப்பு சலுகைகள் இந்த ஆண்டின் நடப்பு காலாண்டு விற்பனையை அதிகரிக்க உதவியாக இருக்கும்.



    சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் எச்டி 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி
    - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    - ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9

    இந்தியாவில் டார்க் கிரே, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கும் ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் 16 ஜிபி மெமரி கொண்ட மாடல் வாங்கும் முதல் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.1,000 தள்ளுபடி வழங்குவதாக சியோமி  அறிவித்தது.
    Next Story
    ×