என் மலர்
செய்திகள்

பட்ஜெட் விலையில் கார்பன் டைட்டானியம் ஃபிரேம்ஸ் எஸ்7: இந்தியாவில் அறிமுகம்
அசத்தல் அம்சங்களுடன் கார்பன் டைட்டானியம் ஃபிரேம்ஸ் எஸ்7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கார்பன் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டைட்டானியம் ஃபிரேம்ஸ் எஸ்7 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல், 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், பின்புறம் கைரேகை ஸ்கேனர், 3000 எம்ஏஎச் பேட்டரி, மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

கார்பன் டைட்டானியம் ஃபிரேம்ஸ் எஸ்7 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் 1920x1080, ஃபுல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.45 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி ஃபோகஸ் கேமரா, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
கார்பன் டைட்டானியம் ஃபிரேம்ஸ் எஸ்7 ஸ்மார்ட்போன் பிளாக், ஷேம்பெயின் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஷாப்க்ளூஸ் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் டைட்டானியம் ஃபிரேம்ஸ் எஸ்7 விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் பெற முடியும். ரூ.6999 செலுத்தி தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரூ.199க்கு ரீசார்ஜ் செய்யும் போது முதல் 18 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 கேஷ்பேக் மற்றும் 36 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
மொபிகுவிக் மூலம் பணம் செலுத்தும் போது ரூ.2,100 சூப்பர்கேஷ் வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Next Story