search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரந்தரமாக விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்
    X

    நிரந்தரமாக விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

    சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.16,999க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய விலை மற்றும் தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சியோமியின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட Mi மேக்ஸ் 2 (64 ஜிபி) ரூ.16,999க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்ட சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சியோமி Mi மேக்ஸ் 2 (32 ஜிபி) விலை ரூ.13,999 மற்றும் Mi மேக்ஸ் 2 (64 ஜிபி) விலை ரூ.15,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.




    சியோமியின் Mi.Com தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து அதிகபட்சம் ரூ.15,000 வரை தள்ளுபடி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பைபேக் கியாரண்டி மற்றும் தேர்வு செய்ய்பப்ட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




    சியோமி Mi மேக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:


    - 6.44 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - கைரேகை ஸ்கேனர், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி.டைப்-சி
    - 5300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் 3.0

    சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு, புதிய செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் ஒன்றை நவம்பர் 3-ம் தேதி சியோமி வெளியிடப்பட இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை சியோமி விற்பனை செய்துள்ளதாக அநிநிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
    Next Story
    ×