search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோக்கியா 2 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்
    X

    நோக்கியா 2 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

    நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சீன வலைத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் அன்டுடு தளத்தில் கசிந்துள்ளது. இதுவரை நோக்கியா 2 வெளியீடு சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் அதன் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்பட்டது. இம்முறை அன்டுடு தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் அதன் விலை குறைவாக இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.



    அந்தவகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் என்ற போதும் இதில் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயஹ்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறம், டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,500க்கு விற்பனை செய்யப்படலாம் என கூறப்பட்டது.



    முன்னதாக ப்ளூடூத் SIG தளத்தில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் வெளியானது. அன்டுடு தளத்தில் நோக்கியா 2 பேட்டரி சார்ந்து எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்பட்டது.

    வெறும் 99 டாலர்கள் விலையில், 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் பட்சத்தில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பலரது கவனத்தை ஈர்க்கும் என்றே கூறலாம். மேலும் நோக்கியா 2 வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 7 சாதனமும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×